நூறாவது நாள்

அறுந்த அந்த சங்கிலி இனணந்தது அன்று
அறிமுகமன்றி அறியா பல முகம் வந்தது
இலகுவாய் இனிக்க இனிக்க
இணைத்து தினமும் பல கூட்டம்
உண்டதையும் கண்டதையும் இமைக்காமல்
உணர்ச்சிகள் வரைந்து வலையுலகம்
எங்கும்  காலை முதல் காலை வரை
என்றும் எப்பொழுதும் சிரித்தே பேசி
ஒவ்வொன்றும் நெஞ்சினில் நீங்கா இருக்க
ஒரு முறையேனும் யாரும் படிக்காமலிருப்பதில்லை நாளும்
ஐயமின்றி துணை இருப்போம் என்ற எண்ணம்
ஈடேற சதம் இன்று சபதம் இன்றி
ஆர்ப்பரிப்போம் பிணைந்தே என்றும்

- இப்படிக்கு போகன்

Followers