கண்ணே கலைமானே

நித்திரை கலைக்க ஆயிரங்கள் உண்டு
முத்தங்கள் குடுக்க நூறு இங்கு உண்டு
என்னுடன் என்றும் இருக்கு நீ ஒன்றே ஒன்று !!

கண்ணே கலைமானே கலங்காதே தேசம் கண்டு
நேசம் இங்கு உண்டு, ரோசம் இருந்த நாடு ,
வீரம் வெளைந்த மண்ணு இன்று கூறு போட்டு
நீரில்லா ஆறு மனிதர்களால் அனைக்க பட்டு
அணைக்கபடா மனம் இங்கு போலி முத்தங்கள்
நினைத்து நித்திரை களைந்து நிஜங்கள் மறந்து !!

I Miss you

சொக்கிய மனம் கசக்குதே ,
தேடுதே உன்னையே நிதம் நிதம் ,
இந்நொடி நீ இருந்தால் எப்படி இருக்கும் என்றே
அந்நொடி தேடி சில்லிட்டு காத்திருக்கும் என்
திக் திக் நெஞ்சம் ,
டிக் டிக் கரத்துக்கும் சூடு வைத்தால்
என் சிலிர்ப்பு அடங்குமோ..

கடி கார முள் கூட துன்பப்பட காணாய்,
நீ கண்ணீர் விடாமல் நான் காக்க ,
குடு குடுவென புன்சிரி முத்துடன் வந்திடு!!
I Miss You !!

Followers