காதலர் தின எண்ணம்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

நம் விழியில் நாம் வந்த பாதை எண்ணி பார்த்தோம்

(அவன்) : மண்டியிட்டு யாசித்தேன் நீ வேண்டுமென்று
(அவள்) : குனிந்து உன்னை கண்டேன் நீயாய் இன்று

(அவன்) : காற்றில் உன் கருங்கூந்தலை சுவாசித்தேன் இன்று
(அவள்) : தொட்டு தான் தூக்கினேன் வெட்கம் கொண்டு

(அவன்) : எழுந்தேன் உன் விழியில் விழுந்தேன்
(அவள்) : கண்டேன் உன்னில் வழிந்தேன்

(அவன்) : அடைக்காமல் உன்னை என்னில் அணைத்தேன்
(அவள்) : பிரிக்காமல் என்னை உன்னிடம் வந்தேன்

(அவன்) : நொடியில் உன்னை புரிந்தேன்
(அவள்) : நொடியில் என்னை உணர்ந்தேன்

(அவன்) : உன் நாணம் கண்டு என்னை தள்ளி நின்றேன்
(அவள்) : உன் தயக்கம் கண்டு நானும் பிரிந்தேன்

(அவன்) : பிரிவால் நானும் வாடி நின்றேன்
(அவள்) : கண்ணால் உன்னை தேடி நின்றேன்

(அவன்) : தள்ளி சென்று நின்று அழுதேன்
(அவள்) : ஓடி வந்து என்னை அளித்தேன்

(அவன்) : காந்தமாய் ஒட்டி கொண்டேன்
(அவள்) : கட்டி அணைத்து இதழ் பதித்தேன்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

காதல் ஒரு ஷணம் என்றாலும் ஒரு யுகம் என்றாலும்
அதன் நிலை
யாசித்தல்
சுவாசித்தல்
புரிதல்
பிரிதல்
உணர்தல்
அளித்தல்
அணைத்தல்
பின்னே பதித்தல்

Followers