எது தவறு

சங்க தமிழ் பேச நானிங்கு இல்லை
தூய மொழி பேசிட எவரும் இல்லை
இன்று சொல்லில் கலக்க குறைவும் இல்லை
கலப்படம் என்பதை தவிர்க்க இயலவும் இல்லை
சுவை கூட்டும் வரை கலவை தவறும் இல்லை
கலவையில் நம்மை தொலைக்கும் வரை எதுவும் தவறில்லை

தவறிட இங்கு வழியுண்டு என்றே சொல்லி செல்லும் கூட்டமும்முண்டு
எவன் என்ன சொன்னால் என்னவென்று கொலை செய்யும் கூட்டமும்முண்டு
இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் கூட்டமும்முண்டு

எதை அறியாவிடிலும் அந்நியன் கொடுத்துவிட்டு சென்ற
அவன் சொல்லேற்று நடக்கும் திறனை மட்டும் தொலைக்கவில்லை !!

கலவை செய்ய சலவை செய்ய பட்டிருக்கும் நமக்கு
மொழியில் தூய்மை வேண்டாமெனினும் உணர்வில் மேன்மை வேண்டாமோ ?

என்ன கொடுமை இது
உணர்வற்று உந்துதலும் அற்று இருக்கும் வரை எதுவும் தவறில்லை தான் !!


Followers