யோசித்து வாகளிப்போம்

நீயும் நானும் ஒன்று தான்
நாம் என்பது எனது அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
போர் என்பது புதிராகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
வாழ் என்பது துடிப்பு அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
உணவு என்பது உனதோ எனதோ அகும் வரை

நீயும் நானும் ஒன்று தான்
உயிர் என்பது உடல் ஆகி துயிலாகும் போது

இவை இப்படி இருக்க , எப்படி நீயும் நானும் வேறானோம்
ஒன்றே வேர் ஒன்றே நீர் என்றபோதும் வேறானோம்
ஏன் என்றே கேள்வி கேட்காமல் எவனோ சொன்னான்
இவன் செய்வான் என்று வாக்களித்து துடித்து
இவனாவது செய்வான் என்றே நம்பி!!
இனியாவது யோசித்து வாகளிப்போம்

Followers