விசாகபட்டினம் (விஷ்ணாகபட்டினம்) முதல் போரா வரை

ஆழ் கடலில் கால் மிதக்க மிதவையில் கால் பதிக்க
சுற்றி எட்டு திக்கும் கண்டோம் முழுதும் நீலமே நிறமாய் இருக்க
எட்டா திசையில் அழகிய மலை ஒன்று இருக்க
நீர் மூழ்கி கப்பலில் கரை அடையந்து,
மலை ஏறி சென்றோம் சிக்கு புக்கு ரயில் வண்டியில்,

மலை மீது மெதுவாய் மழை கொஞ்சம் பெய்திட
அழகான இளம் காலை பொழுதினில்,
குகை ஒன்றை தேடி செல்லும் வழியில்,
அருவி ஒன்று இருக்க , ஏறி பார்த்து நனைந்தோம்,

அதன் குளிர் தாளாமல் மீண்டும் குகை தேடி செல்ல
அவள் என்னை அணைக்க நான் அவளின்
உச்சந்தலையினை முகர
சுவாசங்கள் கலக்கும் தருணம்

யாம் ஈன்ற வாசம் எம்மை அழைத்தது
'அப்பா என்னை தூக்கிக்கோ' என்று

அவளிடம் வினவினேன் எங்கு வந்திரிகிரோமென்று
மழலை மாறாமல் அவள் கூறினாள்
விஷ்ணாகபட்டினம் என்று !!

ஏருடன் பொங்கல்

தமிழர்கென்று சில நாள்
அது நம் திரு நாள் !
வாழ்த்துவோம் உறவாடுவோம் ஓர் குளமாய் !!

சத்துரைக்கும் கதிரவனையும்
உயிர் சுரக்கும் நில தாயையும்
நிலத்தின் தம்பி நிலவையும்
பாலும் உறமமும் வார்க்கும் எங்கள் மாடுகளை
அதன் கன்றுகள் உடன் கூடி விளையாடுவோம் 11

எங்களை உயர்த்தி தாங்கும் எங்கள் ஏருடன்
ஏறி விளையாடுவோம்

இயற்க்கை இன்றி வேறேது என்றே நாங்கள் (இருக்க)
செயற்கையாய் எங்கள் வழிபாட்டை தடுப்பது நியாமா,

தோழ் குடுக்க்ம்ம் (நம்)  குலமே
வாழ்த்துவது நாம்
வாழ்வது நாம் !!

இயற்க்கை அன்னையின் மடியினிலே,
தமிழராய் ஏரினை கட்டி தழுவுவோம் !!


Followers