மூணு ஆறு

மலையில் மழை சாரலில் நாங்கள்
கொஞ்சும் நெஞ்சம்  தீண்ட

பசுந் தேயிலை தோட்டம் நடுவில்
ரோஜா கூட்டம் சேர

நட்பின் முதன்மறை வழியில்
பின்வந்து வாரிசும் பயில

மூணு ஆறு சேர்ந்தது இடத்தினில்
முழு மூச்சு எதிரொலிக்க

நட்பு காதல் பாசம்மூன்றும் கிடைத்ததால்
கம்பீரமாய் நின்று பார்க்க

படகினில் மீதேறி மழையில் மலையில்
அருவியாய் நீரும் ஓடிட

கூடே சேர்ந்தது ஜோடி புறாக்கள்
புகையாய் படம்பல எடுத்திட

ஏதுமறியாது போனாலும் நடுக் காட்டில்
தனிமையின்றி கூட்டமாய் குதூகளிதோம்

இதமாய் தேனீர் காடுகள் நடுவில்
கண்ணன் தேவன் என்றே

நூறாவது நாள்

அறுந்த அந்த சங்கிலி இனணந்தது அன்று
அறிமுகமன்றி அறியா பல முகம் வந்தது
இலகுவாய் இனிக்க இனிக்க
இணைத்து தினமும் பல கூட்டம்
உண்டதையும் கண்டதையும் இமைக்காமல்
உணர்ச்சிகள் வரைந்து வலையுலகம்
எங்கும்  காலை முதல் காலை வரை
என்றும் எப்பொழுதும் சிரித்தே பேசி
ஒவ்வொன்றும் நெஞ்சினில் நீங்கா இருக்க
ஒரு முறையேனும் யாரும் படிக்காமலிருப்பதில்லை நாளும்
ஐயமின்றி துணை இருப்போம் என்ற எண்ணம்
ஈடேற சதம் இன்று சபதம் இன்றி
ஆர்ப்பரிப்போம் பிணைந்தே என்றும்

- இப்படிக்கு போகன்

காதலர் தின எண்ணம்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

நம் விழியில் நாம் வந்த பாதை எண்ணி பார்த்தோம்

(அவன்) : மண்டியிட்டு யாசித்தேன் நீ வேண்டுமென்று
(அவள்) : குனிந்து உன்னை கண்டேன் நீயாய் இன்று

(அவன்) : காற்றில் உன் கருங்கூந்தலை சுவாசித்தேன் இன்று
(அவள்) : தொட்டு தான் தூக்கினேன் வெட்கம் கொண்டு

(அவன்) : எழுந்தேன் உன் விழியில் விழுந்தேன்
(அவள்) : கண்டேன் உன்னில் வழிந்தேன்

(அவன்) : அடைக்காமல் உன்னை என்னில் அணைத்தேன்
(அவள்) : பிரிக்காமல் என்னை உன்னிடம் வந்தேன்

(அவன்) : நொடியில் உன்னை புரிந்தேன்
(அவள்) : நொடியில் என்னை உணர்ந்தேன்

(அவன்) : உன் நாணம் கண்டு என்னை தள்ளி நின்றேன்
(அவள்) : உன் தயக்கம் கண்டு நானும் பிரிந்தேன்

(அவன்) : பிரிவால் நானும் வாடி நின்றேன்
(அவள்) : கண்ணால் உன்னை தேடி நின்றேன்

(அவன்) : தள்ளி சென்று நின்று அழுதேன்
(அவள்) : ஓடி வந்து என்னை அளித்தேன்

(அவன்) : காந்தமாய் ஒட்டி கொண்டேன்
(அவள்) : கட்டி அணைத்து இதழ் பதித்தேன்

கட்டி அனைத்து முத்தம் கொடுத்தோம்
காதலை முழுதாய் உணர்ந்தோம்

காதல் ஒரு ஷணம் என்றாலும் ஒரு யுகம் என்றாலும்
அதன் நிலை
யாசித்தல்
சுவாசித்தல்
புரிதல்
பிரிதல்
உணர்தல்
அளித்தல்
அணைத்தல்
பின்னே பதித்தல்

Followers