!!!! உண்மை சொல்கிறேன் !!!!

சத்தியம் என்பது கடமை ,
அதை சொல்லி தருவது நன்மை !
வாழ்க்கை என்பது வலிமை ,
அதை வாங்கி தருவது உண்மை !
லட்சியம் என்பது வெற்றி ,
அதை தேடி தருவது வாய்மை !
வெள்ளி என்பது வெண்மை ,
திங்கள் வெண்மை என்பது பொய்மை !
வியாழன் என்பது பெரிது ,
வாழ்க்கை என்பது எளிது ,
உன்னிடம் உண்மை மட்டும் இருந்தால் !
வாழ சொல்வது இனிது ,
வாழ்ந்து காட்டுவது .........???
உன் திடத்தில் !!
திட்டம் போட்டு கொள்ளை அடிக்கலாம்,
வட்டம் போட்டு கட்டம் கட்டலாம் ,
சட்டம் தீட்டி உண்மை கோரலாம்,
தேடி செல்வது உண்மை இல்லை
உன்னிடம் உள்ள உணர்வு போரும்
சட்டம் தேவை இல்லை !!
சத்தம் போட்டு பொய் சொல்லலாம் ,
யாரும் நம்பும் வரை உனக்கு துரோகம்
செய்யலாம் ,
உண்மை கண்டு நீ அஞ்சும்
தருணம் உன்னிடம் இருப்பது
பயம் மட்டும் தான்!!
அரண்டவன் ஆண்டவன் ஆகலாம்,
உண்மை மட்டும் கூறும் சமயத்தில் !
பயந்த நீ புத்தன் ஆகிறாய் ,
ஆசை துறக்காமல் அகிலம் வெறுக்காமல்,
உண்மை மட்டும் பேசி ,
ஆதலால் யோசி!!
உண்மை சொல்லி அழைக்கிறேன்
கந்தன் வருகிறான் கண்ணனும் வருகிறான்,
என்ன வென்று கேட்டேன்?
வெற்றி உனது என்கிறான்!!
உண்மையில் உண்மையின் பலம கண்டு, thi
தொன்றென உண்மை சொல்லியிருக்கிறேன்.

Followers