ஜெயா

அனைவருக்கும் அம்மாவாய் திகழ்ந்தாய்
தர்மத்தின் வாது தனை சூது கவ்வும்,
தர்மம்  மீண்டும் வெல்லும் என்றே வந்தாய்
வீழ்ந்த போதும் எழுவுது எப்படி என்று கற்று தந்தாய் !!

எஞ்சிய வாழ்க்கை மக்கற்கென்றே நன்றே செய்தாய்,
எமக்காக நீதி வழியில் உரிமை காத்து தந்தாய் !!

தலைமுறை தாண்டி ஜெயா பாட்டி  என்றும் மாறினாய் !
தலைமுறைக்கும் தமிழர் குல தெய்வமாய்  இருப்பாய்
எங்கள் பராசக்தியே !!

ஆசான் போற்றி

கற்றதை   கற்பித்து ,
கற்பதையும்  கற்பித்து,
கற்றலும் கற்பித்தலும் உழவென்று ,
மெய்யாய் சீராய் சிறப்பாய்
என்னை பயிர்வித்த அணைத்து சான்றோரிடமும்
என்றும் வணங்கி ஆசிகள்  கோருகின்றேன் !!உழைப்பாளர் வாழ்த்து

உழைப்பின்  சுகமுனர்ந்தவனுள்  இருக்கம் தீ,
உழைப்பின்மை வீண் எனும்.

உழைப்பால் வென்றிருக்கும் நாட்டினில் இன்பம்,
உழைத்தே விழா காணும்.

உழைப்பாளர் தினம் என்றும் போற்றும்
உழைப்பை  உள்ளுணர்ந்த மனம்.

Followers