விருத்தம் - அறுபடை வீடு கொண்ட திருமுருகா


கையில் வேல் வாங்கி வந்த இடம் - திரு கைலை

வேல் வாங்கி அரக்கனை தேடி வீரனாய் தளபதி ஆன இடம்

சென் மதுரை தாண்டி தென் கடல் தேடி பெருங்கடல் கண்டு

வேல் கொண்டு வென்ற இடம் - திருசெந்தூர்

சேனையின் தளபதி பதி ஆன இடம்

குன்றின் மேல் நின்றாடி மன்னவன் என்றாகி

மால் மருகன் முருகன் இந்திரன் மருகன் ஆன இடம் - திரு குன்றம் பரங்குன்றம்

குன்றெல்லாம் அவன் வாசம் ஆன இடம்

சிறு பழம் பெற சீறு கொண்டு பறந்து வந்து ஞானம் பெற வேண்டி

ஞானம் தந்த ஆண்டி என்றாலும் ஆளும் தம்பி ஆண்டவன் இருக்கும் இடம் - திரு பழனி

பிரமனக்கு உபதேஷம் , அப்பனக்கு பிரணவம் சொன்ன நாதன் சுவாமி

வீற்று இருக்கும் இடம் - சுவாமி மலை

சுவாமிக்கும் இனம் இல்லை என தனிகன் இறக்கும்

பனி தீர்க்கும் பிணி போக்கும் இடம் - திருத்தணி

தானாக தோன்றி மங்களம் செய்ய மாமன் அருகே

குளிர செய்யும் சோலை நடுவே நின்ற இடம் - திரு சோலை பழமுதிர் சோலை

சோலை அப்பனே தனிகனே சுவாமிநாதா ஆண்டியே பதியே நிதியே

- அறுபடை வீடு கொண்ட திருமுருகா.....

Followers