விடியலை தேடி

நடு நிசியில் வாங்கி வந்தோம் சுதந்திரம் ,
இருளில் வாங்கி வந்த யந்திரம் ,
இருட்டில் வாழ்வது எப்படி என்று கற்று குடுக்குது ,
சுழலாத சக்கிரம் போலே இருக்குது ,

தொட்டதுக்கெல்லாம் பணம் கண்டு ,
தொடாதெல்லாம் இனம் கண்டு ,
ஆயிரம் ஆயிரம் குடுத்து , [லட்சம் கோடி என்று எடுத்து புடுங்கி கொடுத்து]
வாங்கி வந்து வாங்க நிற்குது ,

பேச்சு கூட தப்பாய் இருந்தா ,இங்கே செல்லுதே ?

மூச்சு காற்று விஷமனாலும் , காசு குடுத்தா
மூடி செல்கிறோம் ,மூட செய்யாமல் ,

வாதிகள் வந்தால் கண்டு கொள்ளாமல்
விட்டு விடிகின்றோம் , வெடித்து சிதறும் வரை !!

ஊன் உரைத்தால் , வெளுறி நின்று,
அளிக்க வந்தவன் இவன் என்று எட்டி உதைக்கிறோம்

மானம் காக்க நிற்க வேண்டியவன் ,
பரிசு பெற நிற்கிறான் ,

பரிசம் போட்டு ஆழ வேண்டியவன் ,
கூட்டணி அமைத்து கொலை செய்கிறான் ,

செத்து செத்து பிழைத்தாலும் ,
சாவில்லை எனுக்கென்று , என் தேசம் ,
சொல்லாமல் சொல்கிறது ,
நாமெல்லாம் இருக்கும் வரை !

அதன் நம்பிக்கைகாவது நாம் ,
விடியலை தேடி பயணிக்க வேண்டாமோ ?

Followers