ராதயின் தேடல்

உண்மை சொல்லி அழைத்தால் வருவானோ
கள்ளன் கண்ணன் !!
நினைவிலே நின்றாலும் வெண்ணை திருடி,
என்னை திருடிய கமலன் மாலன்
குழலில் மெல்லிசை கேட்டு
என் இச்சை தந்தேனே
உண்மை சொல்லி அழைத்தால்
வருவானோகள்ளன் கண்ணன் !!
காளிங்கன் சிரத்தில்,கோகர்ணன் கையில்
நிறுத்தி மாயை புரிந்தால்
என்ன செய்வேன் அடி நானும் மயங்காமல் ..
உண்மை சொல்லி அழைத்தாள் வருவானோ கமலன்..
விழியில் வேல்நிருத்தி மண்ணுண்டு உலகம் காட்டிய கள்ளா..
நீ இல்லாமல் இன் ராதயின் மனமில்லை...
நினைத்தாலே வருவாயோ கண்ணா...
கண்ணன் மீது காதல் உண்டு என்றேன்
அதனை சொல்லி சொல்லி கன்றிடம் உன்னையே கண்டேன்..
வந்து விடு, போரும் உன் ஆடல் விளையாடல்..
காதலை சொல்ல சொல்லி அலைகிறேன் வருவாயோ கண்ணனா..

Followers