ஆசிரியர் தினம் 2017


இருள் நீக்கும் ஆசிரியர் :
பெரியர் என்றாலும் சிரியர் என்றாலும் கற்று தரும் குணமிதை
கற்பித்து என்னையும் ஆசான் ஆக்கிய சான்றோர் போற்றி !

பொருள் உணர்த்தும் ஆசான்:
பாரதம் ஊன்றிய கவியே வள்ளலே போற்றி, நீ
காட்டிய பாதையிலே (நீ) சிற்பித்த ரதத்தினை, (நீ)
செலுத்தி செல்ல கற்று தருவாயோ , குருவே சரணம் !

வேதனை அடைந்தது மனம், கல்வி வேள்வியில் எரியுது உயிர்,
நீ கற்று தந்ததை , எவரும் இங்கு சீண்டவே இல்லை !!
கல்வி தரம் என்று கூறி தேர்வு அதனை எழுதவே செய்து,
தேர்ச்சி பெறாவிடில் உயிரும் நீத்து,
இது அல்லவே நீ கண்ட பார் புகழும் தேசம்.
வாழ்வில் ஒரு கட்டம் தேர்வு என்று கற்று தரவில்லையே எவரும்,

கற்ற தொழுகு
கேட்டிலுந் துணிந்து நில்
கவ்வியதை விடேல்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
துன்பம் மறந்திடு
தோல்வியிற் கலங்கேல்
நன்று கருது
நாளெலாம் வினைசெய்
நினைப்பது முடியும்

நீ தந்த மந்திரமிதை
உறக்க சொல்வேன் ஒவ்வொரு நாளும் சொல்வேன்
என்றே கற்று தருவோம்
இனி ஒரு விதி செய்வோம் !

குருவே போற்றி போற்றி !!

Followers