ஒளிரும் சாகரம் ( Beach Beacons )

புத்தொளியில்  மிளிரும் சாகரம் 
கண்ணுக்கெட்டா மானுடம் , எங்கும் அற்புதம்
அமைதியாய் இருந்து , புவி பகிர்ந்து 
எவரையும் உணராது , அனைவரையும் ஆதரிக்கும் !!


( ஓவியம் : அபர்ணா )



(Art : Aparna)

Beach Beacons Light Bliss,
Men at no sight, Wonders Around
Staying Calm , Sharing Earth
Aware of None, Cares for Everyone !!



எதையும் தேடு

எதையும்   தேடு 

அழகு ஒன்று நன்றாய் தெரியுது
அதை நாட (மனம்) பாதையின்றி தவிக்குது
பலம் கொஞ்சம் இருக்குது
நெஞ்சில் உறம் மிச்சம் இருக்குது
அனால் மனம் ஏனோ  பதைக்குது
விடை காண துடிக்குது
விடை தேடவா, அழகை தேடவா ?

தந்தவள் தாய்

தந்தவள் தாய்

வண்ணம்  பல தந்து
அன்பாய் பழக செய்து
அறம் நெறி நேர்ப்பித்து
உண்ண பல குடுத்து
தன்னையே அற்பணித்து
தந்தை தந்தவளாம் தாய்

நீ இன்றி நான் ஏது ?

மலர்ந்ததும் வருகிறேன்
பட்டாம் பூச்சியாய் !
நீ தீட்டிய வண்ணமிதை காண்பிக்க !!


Followers