An epliogue of my most desired creative scribbling at the end of the day.. mostly in the form of compositions
Water Keeps Flowing
கிருஷ்ண ஜென்ம உற்சவம்
கிருஷ்ண ஜென்ம உற்சவம்
நாகன் குடை பிடிக்க
சேஷ நாதன் குடை பிடிக்க
நாராயணன் நந்தனாய்
வந்த கதை அறிவாயோ
தேவகி மைந்தனாய்
தேவனே வந்தானடி
வசுதேவனுக்கு
வாசு தேவனாய்
கம்சனை வதைக்க
ஏழை இழந்தும்
எட்டா கண்ணன்
வருவானோ
என்று
காத்தவளுக்கு
காலம் எல்லாம் கார் முகில்
கண்ணனை கண்ணில் நிறுத்தி
வாசுதேவனுக்கு கட்டளை இட்டான்
அடி
அவன்
வாசுதேவனுக்கு கட்டளை இட்டான்
அடி
எட்டும் எனக்கே கிட்டும்
எவரையும் உயிருடன் விடுவேனோ
எவரையும் உயிருடன் விடுவேனோ
மமதையில் மன்னன் இருக்க
மாதர் சிறையில் இருக்க
மாயை யோக மாயை
சக்தி தாய் அவள்
தந்த யுக்தியுடனே
சிசு நாராயணனை
நந்தவனம் தந்து வர
தந்தை புறப்பட்டான்
திரை போல சிறை விலகியது
தடம் போல ஆறும் அகண்டது
வருணன் மட்டும் விடாமல் கொட்ட
சேஷன் குடை பிடிப்பான் என்று
சிரித்தது
மாய கண்ணனா
யசோதா நந்தனா
ராதை தேடிய கோபாலனா
வாசுதேவனா
கோவர்தனனா
கோவிந்தனா
பூதகிக்கும் மைந்தனா
தேவகி புதல்வனா
எல்லாம் அவன் தான்
என்றுணர எத்தனை
காலம் வேண்டுமோ
கம்சனுக்கே சில காலம் தான் என்றால்
எல்லாம் அவன் தான்
என்றுணர எத்தனை
காலம் வேண்டுமோ
கண்ணா
எல்லாம் அவன் தான்
என்றுணர எத்தனை
காலம் வேண்டுமோ
செயற்கை நுண்ணறிவும் நெறியும்
செயற்கை நுண்ணறிவு நன்னறிவு அகாதெனினும்
எம்மொழியையும் மொழிப்பெயர்க்கும் ஆற்றல் கொண்டு
மொழி அறியாமலே முகம் காணாமலே
எவரோடும் பேசிடலாம் எளிதாக என்றெண்ணி பேசிட வேண்டாம்
ஒரு சிறு மொழிப்ப்பெயர்ப்பு பிழையாலே
முத்து துறைமுகம் அழிந்ததாம்
அணு குண்டும் ஊடுருவி
மனிதம் அழித்ததாம்
நெறியில்லா நுண்ணறிவு மாதிரிகள்
நிறைந்த வண்ணம் இருக்க
நன்னறிவு என்றும் உணர்த்தும்
மனம் அறிய மொழி தேவை இல்லை
உணர்வு ஒன்றே போதும் என்று
குறை குடம் கூத்தாடும்
என்று உணர்ந்தே சொல்லி சென்றனர் பாட்டனர்
நிறை குடம் நீர் தளும்பாதாம்
எப்பொழுதும் எதுவாயினும்
அறிந்தது சிறிது அதுவே சிறந்தது என்றே சொல்லும்
சிற்றின்ப கூட்டம் பின்னே தொடர்ந்தால்
எங்கு வந்து அடைந்தோம் என்று
எண்ணி கொண்டே இருக்க தான் வேண்டுமாம்
நெறி கொண்ட எவரேனும்
தறி கெட்டு ஓடும் மாதிரிகளை
மாற்றி அமைக்க எம்மொழியிலும்
உணர்வு பூர்வமாய் உரைத்திடலாம்
இயற்க்கை தன் பாதை தேடி செல்ல
நெறி ஒன்றே இயற்கையாய் இயல செய்யுமாம்
எந்நுண்ணறிவும் ஈடாய் இராது
நெறி கொண்ட நன்னறிவிற்கு இணையாய்
எது புத்தாண்டு
எது புத்தாண்டு ??
ஜனவரி ஒன்றா , தை ஒன்றா ,
சித்திரை ஒன்றா , ஆடி ஒன்றா ,
ஐப்பசி புதுமதியா ??
சுற்றி வரும் நிலவையோ
சுற்றும் புவியோ
உலாவும் கதிரவனோ
விரியும் சராசரமோ
கடக்கும் காலம் கழிந்தன எனவும்
நாம் கடந்த காலம் சுற்றி வரும் போது
மீண்டும் உணரப்படுவதனால்
செய்த பிழையினை செய்யாமல் இருந்து
செய்த நன்றினை மேலும் நன்றாய் செய்திட
எந்நாளை தேர்வு செய்கிறோமோ
அந்நாளே புத்தாண்டு
சுழலும் பூமாதேவி உணர்த்தும் ஆதவன்
குறிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதே எனினும்
குளிர் கடந்து இயற்கை மலரும் தை
இயற்கை மலர்ந்து இயல்பு திரும்பும் சித்திரை
இயல்பாய் உழுது களைத்து மழையில் நனையும் ஆடி
மழையில் மனதை பகிர்ந்து மகிழும் ஐப்பசி புதுமதி
சுற்றும் புவி தாய் நமக்கு அளித்த வரம்
செய்த செயல் அதன் பலன் அறிந்து
அர்த்தம் கண்டு பலம் பெற
தேர்ந்தெடுக்கும் நாளே புத்தாண்டு !!!
விதைத்தவன் விவேக்
அறிகுறியில்லாமல் அறம் செய்து
பகுத்தறிவு நன்றென்று பரவிட செய்து
புன்னகையில் புவி எங்கும் இறை விதைத்து
இறையென்றும் இரை அளிக்க
மரமெங்கும் விதைத்து
பிரியாவிடையாய் நம்பிக்கையும் விதைத்து
எங்களை சிரிப்பில் நனைத்து
விதையாய் உன்னெண்ணம் தந்தவனே
உலகெங்கும் நீ வ்யாபித்திருப்பாய்
உன் பேரிற்கு ஏற்றாற்போல்
விவேகானந்தனே
பஞ்சான அணில் குஞ்சு ( Softie Squirrel Kutti)
பஞ்சு போல இருக்கும் பந்து
மேல மோதியது ஒரு அணில் குஞ்சு
பயந்த குஞ்சு கொஞ்சம் கெஞ்சுது கண்டு
தேடி ஓடியது அம்மா கண்ணு
கீச் கீச்சென குஞ்சு கத்த
பிஞ்சு அம்மா ஓடி வந்து நின்னது
எங்கள கண்டு
தள்ளி நாங்க நிக்க போக
குட்டியும் அம்மாவும் ஒண்ணா சேர
முத்தமிட்ட பின் தாய் ஓட
தொடர முடியாம சேய் திணற
கவ்வி கொண்டு தாய் ஓட
எல்லாம் நல்ல படியாய் முடிய போக
கூட்டினை அடைந்தது குட்டி நலமாக
On to a Softie like ball
dashed a beautiful Baby Squirrel
Frightened a little, the Lil Cried,
Came searching the mother Squirrel
Hearing Keech Keech of the little one
Came running pinju amma,put a sudden brake seeing us
Giving way (we) moving away a little
Mom and baby came together
joyfully kissing each other
Seeing Little unable to follow
Ran taking Little in her mouth Motherly
All went Well-fully
The Lil reached Nest joyfully
ஒளிரும் சாகரம் ( Beach Beacons )
கண்ணுக்கெட்டா மானுடம் , எங்கும் அற்புதம்
அமைதியாய் இருந்து , புவி பகிர்ந்து
எவரையும் உணராது , அனைவரையும் ஆதரிக்கும் !!
( ஓவியம் : அபர்ணா )
(Art : Aparna)
Beach Beacons Light Bliss,
Men at no sight, Wonders Around
Staying Calm , Sharing Earth
Aware of None, Cares for Everyone !!
எதையும் தேடு
அழகு ஒன்று நன்றாய் தெரியுது
அதை நாட (மனம்) பாதையின்றி தவிக்குது
பலம் கொஞ்சம் இருக்குது
நெஞ்சில் உறம் மிச்சம் இருக்குது
அனால் மனம் ஏனோ பதைக்குது
விடை காண துடிக்குது
விடை தேடவா, அழகை தேடவா ?
பொங்கல் 2020
மிளிரும் பொன் போல்
உள்ளத்தில் அறம் நாடி
மேன்மையில் மென்மை கண்டு
வாழ்த்துக்கள் பொங்கி
வளர்ச்சி தளர்ச்சியின்றி
வற்றாமல் பொங்கல்
பூமி தாய் அவள் அருளட்டும்
வருணன் பொங்கி நீர் நிறையட்டும்
அக்னி சுரந்து சக்தி பெருகட்டும்
வாயு வீசி நற்செய்தி எங்கும் பரவட்டும்
வானம் அதில் நன்மைகள் தரும் ஆதவன் ஒளிரட்டும்
இயற்கையை போற்றி பேணுவோம்.
புத்தாண்டு 2020
வரும் ஆண்டு வந்தாகி விட்டது
ஆண்டும் புத்தாண்டும் என்றும் வந்து கொண்டிருக்கும்
இவ்வாண்டும் புத்தாண்டு வந்தே விட்டது
இனி ஒரு விதி செய்வோமென்றே , புதிதாய் கொள்கை கொள்வோம்
புத்தாண்டு தோறும்.
இல்லை இனி ஒரு விதி நிச்சயம் செய்வோம்
கலாம் கண்ட 2020 வந்தே விட்டது
இனியாவது இனிதாய் இந்தியனாய்
தேசம் போற்றி கனவை நினைவாக்க
ஒரு படியேனும் முன்னெடுத்து வைப்போம்.
பாடம் படிப்போம், பட்டம் விடுவோம்
இடம் கொடுப்போம், வயல் நாடுவோம்
மழை வேண்டுவோம், மந்தம் போக்குவோம்
மண் காப்போம், மரம் வளர்ப்போம்
தொழில் செய்வோம், அர்த்தம் போற்றுவோம்
ஆலைகள் அமைப்போம் , கெடாத சாலைகள் செய்வோம்
பொருள் பல செய்திடுவோம் , திரவியம் கூட்டுவோம்
அறம் வளர்ப்போம், மதம் மறப்போம்
போதும் பதினாறு பெற்றாகிவிட்டது
இவை அனைத்தும் ஒழுங்காய் செயலாக்குவோம்
ஆண்டு அனைத்தும் இனிதாய் இருக்கவே
அடல் - உன்னதமான உறுதி
அன்பாலே உயரம் தொட்டவர்,
திகட்டாத கவி பாகு அவர்,
உறுதியாய் தொண்டு ஆற்றியவர் ,
தேனீ போல் அயராது உழைத்தவர் ,
சுய உதவி குழுக்கள் போற்றி மதித்தவர்,
பயமற்று பொக்ரான் நடத்தியவர் ,
எங்கள் கலாமை எங்களுக்கு தந்தவர்,
கார்கில்லை காத்தவர் ,
தேசத்தின் வலியை உணர்ந்தவர்,
எங்களை வழி நடத்தியவர்,
அனைவருக்கும் பிடித்தவர்,
என்றும் இன்று போல் காலத்தில் வாழ்பவர் ,
அலட்டாத எங்கள் அடல் அவர் !!
Freedom to Me Is
எதற்கானது சுதந்திரம்
கலைஞர் நீர் !!
நட்பின்பால் ( இது குறள் அல்ல )
குரல்
நடந்ததையும் நடப்பதையும் நாடுவதையும் பகிர்ந்திட
மனம்தேடும் கூடாரம் நட்பு !
நட்பதனில் இனம் காணும் மனம் ,
குணமதனை அறிந்தே சேரும் !
குறிப்பு
பரப்பு அதனில் பகுதி பாராமல், (விட்டு கொடுத்தல்)
பிறப்பதனில் சேதி கேளாமல் , (பிரிவு அறிதல் )
இடர் தனில் இடம் கொடாமல், ( திடம் தருதல் )
வலு சேர்க்கும் ஓவியம்,
அழகாய் காட்சி தரும் கூடாரம் !! ( மனதில் ஒசந்து பதிந்திடும் )
Learning Virtue in the Acropolis
அரணில் அறன் அறிதல்
ஆசிரியர் தினம் 2017
இருள் நீக்கும் ஆசிரியர் :
பெரியர் என்றாலும் சிரியர் என்றாலும் கற்று தரும் குணமிதை
கற்பித்து என்னையும் ஆசான் ஆக்கிய சான்றோர் போற்றி !
பொருள் உணர்த்தும் ஆசான்:
பாரதம் ஊன்றிய கவியே வள்ளலே போற்றி, நீ
காட்டிய பாதையிலே (நீ) சிற்பித்த ரதத்தினை, (நீ)
செலுத்தி செல்ல கற்று தருவாயோ , குருவே சரணம் !
வேதனை அடைந்தது மனம், கல்வி வேள்வியில் எரியுது உயிர்,
நீ கற்று தந்ததை , எவரும் இங்கு சீண்டவே இல்லை !!
கல்வி தரம் என்று கூறி தேர்வு அதனை எழுதவே செய்து,
தேர்ச்சி பெறாவிடில் உயிரும் நீத்து,
இது அல்லவே நீ கண்ட பார் புகழும் தேசம்.
வாழ்வில் ஒரு கட்டம் தேர்வு என்று கற்று தரவில்லையே எவரும்,
நீ தந்த மந்திரமிதை
உறக்க சொல்வேன் ஒவ்வொரு நாளும் சொல்வேன்
என்றே கற்று தருவோம்
இனி ஒரு விதி செய்வோம் !
குருவே போற்றி போற்றி !!
மாலுமி மருதுவின் மாமுல் பயணம்
எங்கும் வீசும் வாசம் அனைத்தும்
எங்கள் பாசம் இருக்கும்
நாடிகள் மையில் , நீ கடக்கும்
நாட்டிகல் மைல் எல்லாம்
சீராய் இருக்க பிரார்த்தித்து அனுப்புகிறோம்
பாரெல்லாம் நீராய் பார்த்து மகிழ்ந்தே
சென்று வா பாண்டியா !!

