அன்புடன் எம் மகள் வழி நடத்த
அரண் பல கானில் மனையாள் உடன்
கோட்டை பல காட்டிட , இம்முறை
சென்றுவந்தோம் பீதர், மேதக் அரண் காண
கோட்டை வெளியில் புல்வெளியாய் மலை சாரல்
குதிரைகள் ஓட்ட அழகான இடமென தோன
கோட்டை வாயில் முதல் அழகாய் உள்கட்டு
ரங்கீன் மஹால் , பழைய கோட்டை, நெடும்பாதை
இவ்வனைத்தும் பஹ்மானியர் கட்டிய தென்று
சீக்கியர் அழகாய் குருவாயில் கட்டியிருக்க
அதனில் கேட்டறிந்தோம், அவர்கள் வந்த கதை கேட்காமல் !
மெய்சிலிர்த்து போனோம் எப்போதும் எவ்விடத்திலும் இருக்கும்
சீக்கியர் முறை கண்டு , மகள் ஆசைக்கினங்க லங்கர் உட்கொண்டு
உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லென
ஊற்றாய் பெருகி வந்த சக்தி அங்கு ஜார்னி நரசிம்ஹனை
ஊற்றில் நடந்து சென்று கண்டு களித்தோம் வேண்டி அமர்ந்து !
அழகாய் நீறு ஊற்று மலையில் இருந்து இறங்கி வர
திரு நீறு பூசி பக்தி வெள்ளம் அங்கு வெள்ளத்தில் கலந்து
மஞ்சள் ஆறு போல மஞ்சிரா வழிந்தோட தேக்கம் ஒன்றை
கடந்து மேதகு துர்கம் அடைந்து அங்கு காகடியர் கட்டிய கோட்டை
அதில் தங்கி அதன் மீதேறி இசையாய் இயற்க்கை ரசித்து
ஆசியாவில் பெரிதாய் இருக்கும் இயேசுவின் தேவாலயம் சென்று
ஏழு ஆறு இணையும் வன துர்க்கை இடம் வேண்டி
வித்யா சரஸ்வதியிடம் ஆசி பெற்றே வந்தோம்
எண்ணி பார்க்கையில் மதமின்றி மனங்கள் சேர
மதமற்று கூடுவோம் கூத்தாடுவோம்
புண்ணிய தேசமிதில்
அன்பும் அறனும் உடைத்தாயின் வாழ்க்கை
பண்பும் பயனும் அது !!