சுதந்திரம் என்பது எனக்கு, நானாய் இருப்பது
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அறிவது
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அளிப்பது ,
மனிதனாய் இருப்பது, அணைத்து உயிரிடமும் அன்பை பகிர்ந்து,
மனத்தை அறிவது, மெய்ப்பொருள் கண்டு வணங்கிட்டு ,
மனிதம் அளிப்பது , மனிதனாய் எல்லாரையும் நடத்திட்டு,
நன்றிகள் கூறுகிறேன் பாட்டன் முப்பாட்டனுக்கு ,
என்னை எம் தாய்நாட்டில் விளையாட செய்ததற்கு ,
இல்லையெனில் அளித்திருப்பேன் , என்னை மற்றவர் தேவைக்கு,
இல்லையெனில் அறியாமல் அடிமை பட்டு இருந்திருப்பேன் ,
இல்லையெனில் உணராமல் இருந்திருப்பேன், பிரிக்கப்பட்டேன் என்று ,
சுதந்திரம் என்பது எனக்கு, அவர்களின் தியாகம் தான்
சுதந்திரம் என்பது எனக்கு , தினம் தினம் கூறும் நன்றி
பாரதம் இதை உறுதியானதாய் அமைதியானதாய் வெற்றிகள்
நிறய செய்வேனென்று !!
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!