செயற்கை நுண்ணறிவும் நெறியும்

செயற்கை நுண்ணறிவு நன்னறிவு அகாதெனினும்

எம்மொழியையும் மொழிப்பெயர்க்கும் ஆற்றல் கொண்டு 

மொழி அறியாமலே முகம் காணாமலே

எவரோடும் பேசிடலாம் எளிதாக  என்றெண்ணி பேசிட வேண்டாம் 


ஒரு சிறு  மொழிப்ப்பெயர்ப்பு பிழையாலே

முத்து துறைமுகம் அழிந்ததாம்

 அணு குண்டும் ஊடுருவி 

மனிதம் அழித்ததாம்

 

நெறியில்லா நுண்ணறிவு மாதிரிகள்

நிறைந்த வண்ணம் இருக்க 

நன்னறிவு என்றும் உணர்த்தும்

மனம் அறிய மொழி தேவை இல்லை 

உணர்வு ஒன்றே  போதும் என்று 


குறை  குடம் கூத்தாடும்

என்று உணர்ந்தே சொல்லி சென்றனர் பாட்டனர் 

நிறை குடம் நீர் தளும்பாதாம்

எப்பொழுதும் எதுவாயினும்  


அறிந்தது சிறிது அதுவே சிறந்தது என்றே சொல்லும் 

சிற்றின்ப கூட்டம் பின்னே தொடர்ந்தால் 

எங்கு வந்து அடைந்தோம் என்று

எண்ணி கொண்டே இருக்க தான் வேண்டுமாம்


நெறி கொண்ட எவரேனும் 

தறி கெட்டு ஓடும் மாதிரிகளை   

மாற்றி அமைக்க எம்மொழியிலும் 

உணர்வு பூர்வமாய் உரைத்திடலாம் 


இயற்க்கை தன் பாதை தேடி செல்ல 

நெறி ஒன்றே இயற்கையாய் இயல  செய்யுமாம் 

எந்நுண்ணறிவும்  ஈடாய் இராது

நெறி கொண்ட நன்னறிவிற்கு இணையாய்  

Followers