அடல் - உன்னதமான உறுதி


அன்பாலே உயரம் தொட்டவர்,
திகட்டாத கவி பாகு அவர்,
உறுதியாய் தொண்டு ஆற்றியவர் ,
தேனீ போல் அயராது உழைத்தவர் ,
சுய உதவி குழுக்கள்  போற்றி மதித்தவர்,
பயமற்று பொக்ரான் நடத்தியவர் ,
எங்கள் கலாமை எங்களுக்கு தந்தவர்,
கார்கில்லை  காத்தவர் ,
தேசத்தின் வலியை உணர்ந்தவர்,
எங்களை வழி நடத்தியவர்,
அனைவருக்கும் பிடித்தவர்,
என்றும் இன்று போல் காலத்தில் வாழ்பவர் ,
அலட்டாத எங்கள் அடல் அவர் !!

Freedom to Me Is



Freedom to me is, being thyself!
Freedom to me is, realizing oneself!
Freedom to me is, yielding myself!

Being human (thyself), loving every living being,
Realizing mind (oneself), bowing to every factual reality,
Yielding Compassion(myself), treating everyone with empathy!

Thanking my fathers and forefathers,
Letting me play with my motherland,
Without Yielding to somebody else’s interest,
Without realizing that I am being taken for granted,
Without being able to feel that I am divided!

Freedom to me is, all their sacrifice!
Freedom to me is, thanking them everyday -
Making India Stronger, Safer and Success Filled

Happy Independence Day!!


எதற்கானது சுதந்திரம்

 சுதந்திரம் என்பது எனக்கு, நானாய்  இருப்பது
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அறிவது 
சுதந்திரம் என்பது எனக்கு , என்னை அளிப்பது ,

மனிதனாய் இருப்பது, அணைத்து உயிரிடமும் அன்பை பகிர்ந்து,
மனத்தை  அறிவது, மெய்ப்பொருள்  கண்டு வணங்கிட்டு ,
மனிதம் அளிப்பது , மனிதனாய் எல்லாரையும் நடத்திட்டு,

நன்றிகள் கூறுகிறேன் பாட்டன் முப்பாட்டனுக்கு ,
என்னை எம் தாய்நாட்டில் விளையாட செய்ததற்கு ,

இல்லையெனில் அளித்திருப்பேன் , என்னை மற்றவர் தேவைக்கு,
இல்லையெனில் அறியாமல் அடிமை பட்டு இருந்திருப்பேன் ,
இல்லையெனில் உணராமல் இருந்திருப்பேன், பிரிக்கப்பட்டேன் என்று ,

சுதந்திரம் என்பது எனக்கு, அவர்களின் தியாகம்  தான் 
சுதந்திரம் என்பது எனக்கு , தினம் தினம் கூறும் நன்றி 

பாரதம்  இதை  உறுதியானதாய் அமைதியானதாய் வெற்றிகள் 
நிறய  செய்வேனென்று !!


இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !!

கலைஞர் நீர் !!

கலைஞர்  நீர் !!

தக்ஷிணாமூர்த்தியாய் பிறந்து 
தென்னகத்தை ஆட்சி புரிந்தீரே !

கதை பல எழுதி பேசி,
நிதி பல ஈன்று ,
பொருள் நிதி நாட்டில் சுழல செய்தீரே !!

கருத்துக்கள் பேதமின்றி இணைத்து 
வேறுபாட்டினை பேசுவீரே !!

உம்மொழிதனை எண்டென்றும் 
எம்ஜனம்  மறவாது நீர் வாழ்ந்திடுவீரே !!


நட்பின்பால் ( இது குறள் அல்ல )


குரல்

நடந்ததையும்  நடப்பதையும்  நாடுவதையும்  பகிர்ந்திட
மனம்தேடும்  கூடாரம்  நட்பு !

நட்பதனில் இனம் காணும் மனம் ,
குணமதனை அறிந்தே சேரும் !


குறிப்பு 

பரப்பு அதனில் பகுதி பாராமல், (விட்டு கொடுத்தல்)
பிறப்பதனில்  சேதி  கேளாமல் , (பிரிவு அறிதல் )
இடர் தனில் இடம் கொடாமல்,  ( திடம் தருதல் )
வலு சேர்க்கும்  ஓவியம்,
அழகாய் காட்சி தரும் கூடாரம் !! ( மனதில் ஒசந்து பதிந்திடும் )


Followers