அறிகுறியில்லாமல் அறம் செய்து
பகுத்தறிவு நன்றென்று பரவிட செய்து
புன்னகையில் புவி எங்கும் இறை விதைத்து
இறையென்றும் இரை அளிக்க
மரமெங்கும் விதைத்து
பிரியாவிடையாய் நம்பிக்கையும் விதைத்து
எங்களை சிரிப்பில் நனைத்து
விதையாய் உன்னெண்ணம் தந்தவனே
உலகெங்கும் நீ வ்யாபித்திருப்பாய்
உன் பேரிற்கு ஏற்றாற்போல்
விவேகானந்தனே