கிருஷ்ண ஜென்ம உற்சவம்

கிருஷ்ண ஜென்ம உற்சவம் 

நாகன் குடை பிடிக்க 

சேஷ நாதன் குடை பிடிக்க  

நாராயணன் நந்தனாய் 

வந்த கதை அறிவாயோ


தேவகி மைந்தனாய்

தேவனே வந்தானடி

வசுதேவனுக்கு 

வாசு தேவனாய்   


கம்சனை வதைக்க

ஏழை இழந்தும்

எட்டா கண்ணன் 

வருவானோ 

என்று 

காத்தவளுக்கு


காலம் எல்லாம் கார் முகில்

கண்ணனை கண்ணில் நிறுத்தி


வாசுதேவனுக்கு கட்டளை இட்டான் 

அடி 

அவன் 

வாசுதேவனுக்கு கட்டளை இட்டான் 

அடி


எட்டும் எனக்கே கிட்டும்

எவரையும் உயிருடன் விடுவேனோ 

எவரையும் உயிருடன் விடுவேனோ


மமதையில் மன்னன் இருக்க

மாதர் சிறையில் இருக்க

மாயை யோக  மாயை 

சக்தி தாய் அவள்

தந்த யுக்தியுடனே

சிசு நாராயணனை  

நந்தவனம் தந்து வர

தந்தை புறப்பட்டான்


திரை போல சிறை விலகியது 

தடம் போல ஆறும் அகண்டது

வருணன் மட்டும் விடாமல் கொட்ட

சேஷன் குடை பிடிப்பான் என்று

சிரித்தது

மாய கண்ணனா 

யசோதா நந்தனா

ராதை தேடிய கோபாலனா

வாசுதேவனா     

கோவர்தனனா

கோவிந்தனா 

பூதகிக்கும் மைந்தனா

தேவகி புதல்வனா


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ


கம்சனுக்கே சில காலம் தான் என்றால் 


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ


கண்ணா 


எல்லாம் அவன் தான் 

என்றுணர எத்தனை

காலம் வேண்டுமோ




 





Followers