பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து 
தை பிறந்து , நன்றென்றும் எங்கும் நடக்கட்டும் ,
தேசமிது பாசமாய் மாறட்டும்,
நேசம் பொங்கி, அன்பு பொழியட்டும்,
அன்பினால் மழையும், அழகினால் பகலவன்
துணை என்றும் இருக்கட்டும் ,
எங்கள் வயலெல்லாம் காய்த்து,
பயிரும் கனியும் கிட்டி
இளந்தென்றல் ஆசையாய் பரவட்டும்,
தொடங்கட்டும் நல்லதொரு காலம்
எங்கள் நாட்டிற்க்கு !!

நாளும் நன்றாய் இருக்க
இருப்போம் எண்ணத்திலும் செயலிலும் நல்லதாய்

எது தவறு

சங்க தமிழ் பேச நானிங்கு இல்லை
தூய மொழி பேசிட எவரும் இல்லை
இன்று சொல்லில் கலக்க குறைவும் இல்லை
கலப்படம் என்பதை தவிர்க்க இயலவும் இல்லை
சுவை கூட்டும் வரை கலவை தவறும் இல்லை
கலவையில் நம்மை தொலைக்கும் வரை எதுவும் தவறில்லை

தவறிட இங்கு வழியுண்டு என்றே சொல்லி செல்லும் கூட்டமும்முண்டு
எவன் என்ன சொன்னால் என்னவென்று கொலை செய்யும் கூட்டமும்முண்டு
இவை அனைத்தும் தெரியாமல் இருக்கும் கூட்டமும்முண்டு

எதை அறியாவிடிலும் அந்நியன் கொடுத்துவிட்டு சென்ற
அவன் சொல்லேற்று நடக்கும் திறனை மட்டும் தொலைக்கவில்லை !!

கலவை செய்ய சலவை செய்ய பட்டிருக்கும் நமக்கு
மொழியில் தூய்மை வேண்டாமெனினும் உணர்வில் மேன்மை வேண்டாமோ ?

என்ன கொடுமை இது
உணர்வற்று உந்துதலும் அற்று இருக்கும் வரை எதுவும் தவறில்லை தான் !!


விடியலை தேடி

நடு நிசியில் வாங்கி வந்தோம் சுதந்திரம் ,
இருளில் வாங்கி வந்த யந்திரம் ,
இருட்டில் வாழ்வது எப்படி என்று கற்று குடுக்குது ,
சுழலாத சக்கிரம் போலே இருக்குது ,

தொட்டதுக்கெல்லாம் பணம் கண்டு ,
தொடாதெல்லாம் இனம் கண்டு ,
ஆயிரம் ஆயிரம் குடுத்து , [லட்சம் கோடி என்று எடுத்து புடுங்கி கொடுத்து]
வாங்கி வந்து வாங்க நிற்குது ,

பேச்சு கூட தப்பாய் இருந்தா ,இங்கே செல்லுதே ?

மூச்சு காற்று விஷமனாலும் , காசு குடுத்தா
மூடி செல்கிறோம் ,மூட செய்யாமல் ,

வாதிகள் வந்தால் கண்டு கொள்ளாமல்
விட்டு விடிகின்றோம் , வெடித்து சிதறும் வரை !!

ஊன் உரைத்தால் , வெளுறி நின்று,
அளிக்க வந்தவன் இவன் என்று எட்டி உதைக்கிறோம்

மானம் காக்க நிற்க வேண்டியவன் ,
பரிசு பெற நிற்கிறான் ,

பரிசம் போட்டு ஆழ வேண்டியவன் ,
கூட்டணி அமைத்து கொலை செய்கிறான் ,

செத்து செத்து பிழைத்தாலும் ,
சாவில்லை எனுக்கென்று , என் தேசம் ,
சொல்லாமல் சொல்கிறது ,
நாமெல்லாம் இருக்கும் வரை !

அதன் நம்பிக்கைகாவது நாம் ,
விடியலை தேடி பயணிக்க வேண்டாமோ ?

Followers