இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் என்று யாரோ சொன்னார்கள்
என்றோ எப்பொழுதோ நடந்த ஒன்றிற்காக இன்றும் தவிப்பதோ ஏனோ?

வலி இருக்கலாம் மறபதர்க்காக மருந்து இங்கு உண்டு
வழி இருக்கும்போதும் மறைக்க இங்கு ஆயிரம் இருக்க
தெரியாமல் தத்தளிக்க கானல் நீரில் கூட முடிந்த போது

ஏன் தயங்குகிறாய் !
உன்னால் முடியும் என்று நம்பி உந்தி நட
இதுவும் கடந்து போகும் !!

கயிறே கயிறே

கயிறே கயிறே தடுக்கி விட்டு
காதல் செய்ய சொன்னாய்
நீயே நீயே தாலி கொடியாய் மாறி
கலவி கொள்ள செய்தாய்
தாமதம் இல்லா தனி ஒரு நாட்டில்
தனியே ராஜ்யம் அமைத்து
கூடி வாழ கூட்டி செல்வாயோ
தேன் வண்டு போல் நான்
அவளை தீண்டிட கொடி போல்
அவள் பின்னிட ஆணி ஆய் இருப்பையோ
அலை கடலில் ஆழம் பார்க்க சென்றாலும்
ஆடி வந்து உன்னுடுன் இருக்க
நங்கூரம் ஆய் இருப்பாயோ

ராதயின் தேடல்

உண்மை சொல்லி அழைத்தால் வருவானோ
கள்ளன் கண்ணன் !!
நினைவிலே நின்றாலும் வெண்ணை திருடி,
என்னை திருடிய கமலன் மாலன்
குழலில் மெல்லிசை கேட்டு
என் இச்சை தந்தேனே
உண்மை சொல்லி அழைத்தால்
வருவானோகள்ளன் கண்ணன் !!
காளிங்கன் சிரத்தில்,கோகர்ணன் கையில்
நிறுத்தி மாயை புரிந்தால்
என்ன செய்வேன் அடி நானும் மயங்காமல் ..
உண்மை சொல்லி அழைத்தாள் வருவானோ கமலன்..
விழியில் வேல்நிருத்தி மண்ணுண்டு உலகம் காட்டிய கள்ளா..
நீ இல்லாமல் இன் ராதயின் மனமில்லை...
நினைத்தாலே வருவாயோ கண்ணா...
கண்ணன் மீது காதல் உண்டு என்றேன்
அதனை சொல்லி சொல்லி கன்றிடம் உன்னையே கண்டேன்..
வந்து விடு, போரும் உன் ஆடல் விளையாடல்..
காதலை சொல்ல சொல்லி அலைகிறேன் வருவாயோ கண்ணனா..

Followers