An epliogue of my most desired creative scribbling at the end of the day.. mostly in the form of compositions
பொங்கல் 2020
தை திருநாள் இன்று
மிளிரும் பொன் போல்
உள்ளத்தில் அறம் நாடி
மேன்மையில் மென்மை கண்டு
வாழ்த்துக்கள் பொங்கி
வளர்ச்சி தளர்ச்சியின்றி
வற்றாமல் பொங்கல்
பூமி தாய் அவள் அருளட்டும்
வருணன் பொங்கி நீர் நிறையட்டும்
அக்னி சுரந்து சக்தி பெருகட்டும்
வாயு வீசி நற்செய்தி எங்கும் பரவட்டும்
வானம் அதில் நன்மைகள் தரும் ஆதவன் ஒளிரட்டும்
இயற்கையை போற்றி பேணுவோம்.
மிளிரும் பொன் போல்
உள்ளத்தில் அறம் நாடி
மேன்மையில் மென்மை கண்டு
வாழ்த்துக்கள் பொங்கி
வளர்ச்சி தளர்ச்சியின்றி
வற்றாமல் பொங்கல்
பூமி தாய் அவள் அருளட்டும்
வருணன் பொங்கி நீர் நிறையட்டும்
அக்னி சுரந்து சக்தி பெருகட்டும்
வாயு வீசி நற்செய்தி எங்கும் பரவட்டும்
வானம் அதில் நன்மைகள் தரும் ஆதவன் ஒளிரட்டும்
இயற்கையை போற்றி பேணுவோம்.
புத்தாண்டு 2020
சென்ற ஆண்டு சென்றாகி விட்டது ,
வரும் ஆண்டு வந்தாகி விட்டது
ஆண்டும் புத்தாண்டும் என்றும் வந்து கொண்டிருக்கும்
இவ்வாண்டும் புத்தாண்டு வந்தே விட்டது
இனி ஒரு விதி செய்வோமென்றே , புதிதாய் கொள்கை கொள்வோம்
புத்தாண்டு தோறும்.
இல்லை இனி ஒரு விதி நிச்சயம் செய்வோம்
கலாம் கண்ட 2020 வந்தே விட்டது
இனியாவது இனிதாய் இந்தியனாய்
தேசம் போற்றி கனவை நினைவாக்க
ஒரு படியேனும் முன்னெடுத்து வைப்போம்.
பாடம் படிப்போம், பட்டம் விடுவோம்
இடம் கொடுப்போம், வயல் நாடுவோம்
மழை வேண்டுவோம், மந்தம் போக்குவோம்
மண் காப்போம், மரம் வளர்ப்போம்
தொழில் செய்வோம், அர்த்தம் போற்றுவோம்
ஆலைகள் அமைப்போம் , கெடாத சாலைகள் செய்வோம்
பொருள் பல செய்திடுவோம் , திரவியம் கூட்டுவோம்
அறம் வளர்ப்போம், மதம் மறப்போம்
போதும் பதினாறு பெற்றாகிவிட்டது
இவை அனைத்தும் ஒழுங்காய் செயலாக்குவோம்
ஆண்டு அனைத்தும் இனிதாய் இருக்கவே
வரும் ஆண்டு வந்தாகி விட்டது
ஆண்டும் புத்தாண்டும் என்றும் வந்து கொண்டிருக்கும்
இவ்வாண்டும் புத்தாண்டு வந்தே விட்டது
இனி ஒரு விதி செய்வோமென்றே , புதிதாய் கொள்கை கொள்வோம்
புத்தாண்டு தோறும்.
இல்லை இனி ஒரு விதி நிச்சயம் செய்வோம்
கலாம் கண்ட 2020 வந்தே விட்டது
இனியாவது இனிதாய் இந்தியனாய்
தேசம் போற்றி கனவை நினைவாக்க
ஒரு படியேனும் முன்னெடுத்து வைப்போம்.
பாடம் படிப்போம், பட்டம் விடுவோம்
இடம் கொடுப்போம், வயல் நாடுவோம்
மழை வேண்டுவோம், மந்தம் போக்குவோம்
மண் காப்போம், மரம் வளர்ப்போம்
தொழில் செய்வோம், அர்த்தம் போற்றுவோம்
ஆலைகள் அமைப்போம் , கெடாத சாலைகள் செய்வோம்
பொருள் பல செய்திடுவோம் , திரவியம் கூட்டுவோம்
அறம் வளர்ப்போம், மதம் மறப்போம்
போதும் பதினாறு பெற்றாகிவிட்டது
இவை அனைத்தும் ஒழுங்காய் செயலாக்குவோம்
ஆண்டு அனைத்தும் இனிதாய் இருக்கவே
Subscribe to:
Posts (Atom)
