எது புத்தாண்டு ??
ஜனவரி ஒன்றா , தை ஒன்றா ,
சித்திரை ஒன்றா , ஆடி ஒன்றா ,
ஐப்பசி புதுமதியா ??
சுற்றி வரும் நிலவையோ
சுற்றும் புவியோ
உலாவும் கதிரவனோ
விரியும் சராசரமோ
கடக்கும் காலம் கழிந்தன எனவும்
நாம் கடந்த காலம் சுற்றி வரும் போது
மீண்டும் உணரப்படுவதனால்
செய்த பிழையினை செய்யாமல் இருந்து
செய்த நன்றினை மேலும் நன்றாய் செய்திட
எந்நாளை தேர்வு செய்கிறோமோ
அந்நாளே புத்தாண்டு
சுழலும் பூமாதேவி உணர்த்தும் ஆதவன்
குறிக்கும் ஒவ்வொரு நாளும் புதிதே எனினும்
குளிர் கடந்து இயற்கை மலரும் தை
இயற்கை மலர்ந்து இயல்பு திரும்பும் சித்திரை
இயல்பாய் உழுது களைத்து மழையில் நனையும் ஆடி
மழையில் மனதை பகிர்ந்து மகிழும் ஐப்பசி புதுமதி
சுற்றும் புவி தாய் நமக்கு அளித்த வரம்
செய்த செயல் அதன் பலன் அறிந்து
அர்த்தம் கண்டு பலம் பெற
தேர்ந்தெடுக்கும் நாளே புத்தாண்டு !!!