மாலுமி மருதுவின் மாமுல் பயணம்

செந்தூரா நீ செல்லும் தூரம்
எங்கும் வீசும் வாசம் அனைத்தும்
எங்கள் பாசம் இருக்கும்

நாடிகள் மையில் , நீ கடக்கும்
நாட்டிகல் மைல் எல்லாம்
சீராய் இருக்க பிரார்த்தித்து அனுப்புகிறோம்

பாரெல்லாம் நீராய் பார்த்து மகிழ்ந்தே
சென்று வா பாண்டியா !!

தேசத்தின் நேசம்

வேதனை அடையிது மனம்
இங்கு சினம் கொண்டு சீறுது குணம்
ஆச்சு ஆட்சி இல்லை எனில்
நச்சு கக்குது நாவில்

வளர்ச்சி கண்டு பொறாமை கொண்டு
செய்வதறியாது துரோகம் புரியும்
மனம் கொண்டு வாழ்வாரோ ??

பாரதம் கண்டேதெல்லாம் அற்றவநெல்லாம்
பொறாமை தீயில் வீழ்ந்தோரே என்றும் ..

தேசம் வீழ்ந்தாவது நான்
பீடத்தில் அமர்வேன் என்று
பேசி திரிவோர் எல்லாம் அறிவாரோ
துரோகிகள் தான் முதலில் வீழ்வோர் என்று

பயமில்லை என்றும் எமக்கு
நூறு கோடி போராளி இருக்க
காற்றை கூட காப்பாற்றி
சேர்ந்தே காத்து நிற்போம் !!

Followers