Love: Senses of ownership

Translation of



Dream, thy not ruin my sleep 
Oculus, thy not swallow my senses !
Words, thy not stop my voices,
My Life, Not trouble me to danger !!

Nature, thy not separate my feathers,
Smile, thy not reduce my anger !
Lip, thy not forget my desire,
My Love, Not dismantle me !!

Dam, thy not stop my waves,
Virtue,thy not take my wonder !
Fortwall, thy not close my doors,
My Ownership, Not refuse me !!

காதல் : உணர்வும் உடமையும்

கனவே, என்  நித்திரை  அழிக்காதே
விழியே, என் உணர்வினை  விழுங்காதே!
சொல்லே, என்  குரலை  அடைக்காதே,
எந்தன் உயிரே, என்னை இடராதே !!


இயல்பே, என்  சிறகை பிரிக்காதே,
சிரிப்பே, என் சினத்தை குறைக்காதே!
இதழே, என்  இச்சையை மறக்காதே,
எந்தன் காதலே, என்னை கலைக்காதே!!

அணையே, என் அலையை தடுக்காதே,
வினையே, என் வியப்பை அள்ளாதே!
மதிலே, என் வாயிலை அடைக்காதே,
எந்தன் உடைமையே , என்னை மறுக்காதே !!

நட்பு

அன்பு அறம் ஆழம் இம்மூன்றும்,
தருவது யாவும் நட்பு !!

காலத்தால் அழியாத களம்

காலத்தால் அழியாத களம்
 
காலன் கலாமை அள்ளலாம் !
காலம் கலாமை வெல்லுமோ !!

கடினம் கலாமை அழுத்துலாம் !
கடமை கலாமை வெல்லுமோ !!

காற்று கலாமை பரப்பலாம் !
அக்னி சுடர் தனை அணைக்குமா !! 

கற்று, கற்பித்து, உயிர்த்து - உயிர்பித்து
காலத்தால் அழியா கலாமாய் 
என்றும் உலா வரும், எங்கள் நெஞ்சில்

மேலோகம் சென்றும் பரதனாய்
பூலோகம் காப்பீர் இந்தியனாய் !!

Followers